1.எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே
எழுதென்று சிறப்பித்துக் கூறப்பெறுவன, சார்ந்து வருதலைத் தமக்குத் தன்மையாக உடைய மூன்றெழுத்துக்களும் இல்லா தவிடத்து, அ கரம் முதல் ன கரம் இறுதியாக விளங்கும் முப்ப்ஃதுமாம் என்பர்.( அச் சார்பெழுத்துக்கள் மூன்றும் சேர்ந்தவழி , எழுத்துக்கள் மூப்பத்து மூன்றாம் )
2.அவைதாம்,
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
சார்ந்துவரும் என்று மேலே சொல்லப்பெற்ற குற்றிய லிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்றுவகைப் புள்ளிட்ட எழுத்துக்களோடும், மேற்கூறப்பெற்ற முப்பது எழுத்துக்களோடும் ஓரு தன்மையலாய் வழங்கும்.
3. அவற்றுள்,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.
முற்கூறப்பட்ட முப்பதெழுத்தினுள், அ இ உ எ ஒ என்று கூறப்பெறுகின்ற அப்பகுதிகளைந்தும் ஒரு மாத்திரை ஓலிக்
4.ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்று சொல்லப்பெறும் அப்பகுப்பினையுடைய ஏழு எழுத்துக்களும், ஒவ்வோர் எழுத்தும் இரண்டு மாத்திரையளவாக ஒலிக்கும், நெட்டெழுத்துக்களாம் என்று புலவர் கூறுவர்
5.மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே.
ஓர் எழுத்துமட்டுமே நின்று மூன்று மாத்திரை கால அளவுக்கு ஒலித்தல் என்பது தமிழில் இல்லை.
6.நீட்டம் வேண்டின் அவ் அளபுடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.
வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக, இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து மேலும் நீட்டியொலித்தலை விரும்பினால், 'அவ்வளபுடைய எழுத்துக்களைக் கூட்டி, அவ்வொலியை எழுப்புக' என்று கூறுவர் புலவர். (எடுத்துக்காட்டு) ஆஅ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ என வரும்; இவை மூன்று மாத்திரை பெற்றன. செறா அ அய், இலா அ அர் என 4 மாத்திரை பெறுவனவும் காண்க.
7.கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.
கண்ணை இமைத்தலும் கையை நொடித்தலும் செய்தற்காகும் கால அளவர்கிய அவ்விரண்டே மாத்திரைக்கு அளவாகாக் கூறப்படுவது. இது, நுட்பமாக எழுத்து ஒலி இலக்கணத்தை உணர்ந்த புலவர்ள் அறிந்து கூறிய நெறியாகும்.
8.ஔகார இறுவாய்ப்
பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப.
'அ' கரம் முதலாக 'ஔ' காரம் இறுதியாக வழங்கும் பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்களாம் என்று புலவர் கூறுவர்.
9.னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய் என மொழிப.
'க' காரம் முதலாக 'ன' காரம் இறுதியாவுள்ள பதினெட்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களாம் என்று புலவர் கூறுவர்.
10.மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா.
பன்னிரண்டு உயிரெழத்துக்களும் பதினெட்டு மெய் யெழுத்துக்களோடுங் கடி நின்றனவாயினும், தம்முட்ய உயிரெழுத்துக்களுக்குரிய இலக்கணத்தினின்றும் அவை மாறு படமாட்டா.
மெய்யின் அளபே அரை என மொழிப. 11
அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே. 12
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடன் அருகும் தெரியும் காலை. 13
உட் பெறு புள்ளி உரு ஆகும்மே. 14
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 15
எகர ஒகரத்து இயற்கையும் அற்றே. 16
புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. 17
மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. 18
வல்லெழுத்து என்ப க ச ட த ப ற. 19
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன. 20
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள. 21
அம் மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும் காலை. 22
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்
க ச ப என்னும் மூ எழுத்து உரிய. 23
அவற்றுள்,
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும். 24
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர்
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. 25
அவற்றுள்,
ண னஃகான் முன்னர்
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய. 26
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. 27
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும். 28
ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும். 29
மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே. 30
அ இ உ அம் மூன்றும் சுட்டு. 31
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 32
அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர். 33